திராவிடத் தத்துவம்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது திராவிடத் தத்துவம். உலகளாவிய சமநிலை மானுடம் மலர வேண்டும் என்ற குறிக்கோளோடு, "பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம்" என்பார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இது சுயமரியாதை - சமத்துவம் - சமதர்மம் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மதம், ஜாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், திருமணம், குடும்பம், பொருளாதாரம் இவற்றின் தற்போதைய அடிக்கட்டுமானத்தை மாற்றி எல்லார்க்கும் எல்லாமுமான சமநிலையை உருவாக்குவதாகும்.
"ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது; மக்கள் நாகரிக நிலைக்கு வந்திருக்கிறார்கள்; நாட்டில் அறிவும், ஒழுக்கமும், நாணயமும், சமநிலையும் வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால் நாட்டில் எல்லாத் துறைகளிலும்...
சம தர்மம்
சம ஈவு
சம உடைமை
சம ஆட்சித் தன்மை
சம நோக்கு
சம நுகர்ச்சி
சம அனுபவம்
இருக்கவேண்டும்!
ஏற்படவேண்டும்!!
ஏற்படுத்தப்படவேண்டும்!!!
ஏற்பட்டாக வேண்டும்!!!! "
(விடுதலை, 13.1.1965) கூறுவது திராவிடக் கொள்கைகள்-கோட்பாடுகளின் சுருக்கப் பிழிவாகும்.